ஜெ., இப்படித்தான் இருந்தார் : அப்பல்லோ தலைவர் பரபரப்பு பேட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில், அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது.

large_prathap-reddy-3905சமீபத்தில் விசாரணையை தொடங்கிய அந்த விசாரணை ஆணையமும் தற்போது பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஜெ.,வுக்கு சிகிச்சை அளித்தவர்கள், அறிந்தவர்கள் என்று இந்த விசாரணை ஆணையத்திடம் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் சில தகவல்கள் ரகசியமாகப் பெற்றப்பட்டு வருகின்றன.

இதுவரையிலும் விசாரணை நடத்தப்பட்ட 16 பேரில் 10 பேர் மருத்துவர்கள். கடந்த வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களான தர்மராஜ், நாராயணபாபு, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, கலா மற்றும் மயில்வாகனன் ஆகியோர் ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தகவல்கள் அளித்தனர்.

அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக, ஜெயலலிதா கைரேகை பதிவு விவகாரத்தில் மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீண்டும் விசாரிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருப்பதாக கூறினார். தற்போது விசாரணை நடைபெறுவதால் ஜெயலலிதா மரணம் குறித்து எதுவும் பேச முடியாது என்று கூறினார்.

மேலும் அவர், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் இருந்து தமக்கு சம்மன் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது கவலைகிடமாக இருந்தார் என்றும் சிகிச்சைக்கு பின் அவர் உடல்நிலை தேறியதாகவும் கூறியுள்ளார்.