அமெரிக்காவின் ஓஹியோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் அடையாளம் தெரியா முகமூடி நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த 53 வயதான கருணாகர் என்பவரே கொல்லப்பட்டார்.
கொள்ளையிட முயன்ற மர்ம நபர்களை இவர் தடுக்க முற்பட்டபோதே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்பட்வில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்படுகின்றனர்.
30 வயது இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் கடந்த மாதம் சுடப்பட்டு படுகாயமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.