நீண்ட காலத்திற்குப் பின் நாடு திரும்பும் இலங்கை அகதிகள்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

நீண்ட காலத்திற்குப் பின் தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian_refugees001நாடு திரும்பியுள்ள இலங்கை அகதிகளில் தமிழகத்தில் பிறந்து, 21 வயதைப் பூர்த்தி செய்த இலங்கையர்களுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்காக சுமார் 25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திலுள்ள 107 முகாம்களில் சுமார் 63,000 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.