கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட சென்னை மதுரவாயல் பொலிஸ் அதிகாரி பெரியபாண்டியன் கொலை சம்பவத்தில் மற்றைய பொலிஸ் அதிகாரியான முனிசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியான பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ராஜஸ்தான் பொலிஸார் விசாரணை, அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது பொலிஸ் அதிகாரியான முனிசேகரின் துப்பாக்கியில் இருந்த ரவை எனவும், அவரால் தான் பெரியபாண்டியன் சுடப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற தன்னையும், பொலிஸ் அதிகாரியான பெரியபாண்டியனையும் அவர்கள் தாக்கிய போது, கீழே விழுந்த தனது துப்பாக்கியை பெரிய பாண்டியன் எடுத்ததாக பொலிஸ் அதிகாரியான முனிசேகரன் ராஜஸ்தான் பொலிஸில் தகவல் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது கவனயீனமாக செயற்பட்ட காரணத்தால் சென்னை கொளத்தூர் பொலிஸ் அதிகாரியான முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.