விரக்தியால் தாய், தங்கையை கொலை செய்து தானும் தற்கொலை!

தமிழகத்தில் தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விட்டு மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5a354c5ceb46a-IBCTAMILவிழுப்புரம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ராஜாராமன் கடலூரில் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். ராஜாராமனுக்கு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது மருத்துவமனை சிகிச்சைக்காக 60 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளது. இதனையடுத்து ராஜாராமனின் மகன் ரஞ்சித்குமார் பணத்தை புரட்டுவதற்கு முயற்சித்து பணம் கிடைக்காத நிலையில் ரஞ்சித்குமார் உட்பட அவரது குடும்பமே மன உளைச்சலில் இருந்தது.

இதனால் விரக்தி அடைந்த ரஞ்சித்குமார் தனது தாய் மற்றும் தங்கையான வித்யபிரியாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.