வரம்பு மீறும் ஆளுநர் ; எச்சரிக்கும் ப.சிதம்பரம்.!

தமிழகத்தில் கோவை, நெல்லை, கடலூர் என தன் ஆய்வுப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். முதலில் கோவை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வுசெய்தார்.

5a35f48211571-IBCTAMIL (1)ஆளுநரின் இந்த ஆய்வு பணிகள், மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது எனவும், அரசு இயந்திரத்தில் அத்துமீறி தலையிடும் செயல் எனவும் ஆளுநரின் செயற்பாட்டினை மிக கடுமையாக எதிர்த்து வருகின்றன திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

வரம்பு மீறும் ஆளுநர் ; ட்விட்டரில் எச்சரிக்கும் ப.சிதம்பரம்.!

இந்நிலையில், ஆளுநரின் தொடர் ஆய்வு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநரின் அறிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. மாநில ஆளுநர் என்பவர் பெயரளவிலான நிர்வாகி. உண்மையான நிர்வாகத் தலைவர் மாநில முதல்வர் தான். மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சப்படுவதால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். ஆய்வுக்கூட்டங்களுக்கு ஆளுநர் அழைத்தால் செல்ல வேண்டாம் என முதல்வர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.