கள்ளக்காதலனோடு இருந்த தாயை பார்த்த மகள் கழுத்தறுத்து கொலை!

புது டெல்லியில், கடந்த புதன்கிழமை இரவு அன்று, முனிதேவி(30) இவர் தனது காஜல் என்ற ஆறு வயது குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இதன் பேரில் உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

201709141758114432_young-girl-murder-in-vellore_SECVPFஒவ்வொரு வீடாக சென்று விசாரணை செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுமி காஜல் சடலமாக மீட்டனர்.

இது குறித்து அந்த சிறுமியின் தாயார் முனிதேவியிடம்(30) விசாரித்தனர், அப்போது அவர் கூறுகையில், நான் என் கணவருடன் வீட்டில் இருந்தேன். என் மகள் காஜல், இரு குழந்தைகளுடன் விளையாட சென்றார். சிறிது நேரம் சென்றது, பிறகு காஜல் உடன் விளையாடிய இரு குழந்தைகளுடன் விசாரித்தேன் அப்போது அவர்கள் காஜல் பேயை பார்க்க போனார் திரும்ப வரவில்லை என்று தெரிவித்தார்கள் என கூறினார். மேலும் சற்று கண்கலங்கியது போன்று தற்போது ‘என் மகள் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதால் யாரோ மந்திரவாதி என் மகளை பலி கொடுத்துள்ளான்’ என நினைக்கிறேன் என்று காஜலின் தாயார் கூறியுள்ளார்.

இந்த பதிலை கேட்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர், முனிதேவியிடம் துருவி துருவி கேள்வி கேட்டுள்ளனர். இதனால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து பொலிசார் தங்கள் பாணியில் விசாரனை செய்தனர்.

அப்போது குழந்தையை கொலை செய்ததை முனிதேவி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக பொலிஸாரிடம் முனிதேவி கூறியதாவது:

நேற்று (வியாழன்கிழமை) காலை நானும் என் காதலன் சுதிரும்(22) கைக்கோர்த்தப்படி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களை கண்ட காஜல், அப்பா, அப்பா என்று அலறி கொண்டு ஓடினால். அப்போது தடுத்து நிறுத்தி, அப்பாவிடம் இதை பற்றி சொல்லகூடாது என்று சொன்னோம்.

ஆனால் காஜல் மீண்டும் அப்பா என்று கத்தியபடி ஓடினாள். எனவே விஷயம் தெரிந்துவிடும் என்ற பயத்தில் நானும், சுதிரும் இணைந்து காஜல் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். தொடர்ந்து பக்கத்து மாடியில்தூக்கி எறிந்தோம்’ என்றார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முனிதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுதிரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.