டிசம்பர் 21 ஆம் தேதி அன்று 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் கூறியுள்ளது.
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி கண்டிப்பாக விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கையில், திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுதலையாகி விட்டால், அவருக்கு, கட்சியின் பொருளாளர் அல்லது துணைப் பொதுச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசத் துவங்கி உள்ளனர்.
திமுக பொதுச் செயலர் அன்பழகனும் அதனை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
2ஜி வழக்கில் சிக்க வைக்கப்பட்ட கனிமொழி., கட்சிக்காகவும், குடும்பத்திற்காகவும் எந்த விஷயத்தையும் வெளியே சொல்லவில்லை.
அவர் இந்த வழக்குத் தொடர்பாக 6 மாதம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்காக அவருக்கு, கட்சியில் மிக முக்கியப் பொறுப்பை அளிக்க வேண்டும் என அன்பழகன் உறுதியாக கூறியிருக்கிறாராம்.
இதையறிந்ததும் கட்சியின் செயல் தலைவரான ஸ்டாலின் கடும் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், திடீரென்று கட்சியின் பொதுச் செயலரான அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்ததோடு, RK நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேசி இருக்கிறார். அதனோடு, கனிமொழிக்கு பதவி வழங்கும் திட்டம் குறித்து பேசியிருக்கிறார்.
கனிமொழிக்கு பதவி இப்போது வழங்க வேண்டாம். அப்படி வழங்குவதாக இருந்தால் சில காலம் கழிந்த பின், செய்யலாம் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆனால்., அதை அன்பழகன் ஏற்கவில்லை என்றதும், கடும் டென்ஷனுடன் திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமொழி முக்கிய பொறுப்பிற்கு வந்து விட்டால் தன்னுடைய செல்வாக்கு குறைந்து விடும் என்று ஸ்டாலின் நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.