மலர்கள் ஏற்றுமதி மூலம் ஒரு கோடி 36 இலட்சம் வருமானம்!

201703312043352889_ooty-flowers-price-low-shock-farmers_SECVPFநாட்டிலுள்ள,  மலர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களமானது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

மலர்கள் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு ஒரு கோடி 36 இலட்சம் வருமானம்!

புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மலர் உற்பத்தியாளர்களுக்கு தேவையான அறிவு, நடைமுறைப் பயிற்சி மற்றும் மலர்ச்சாடி உபகரணங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட உள்ளன.

கடந்த வருடம் வெளிநாட்டிற்கு மலர்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கைக்கு  1 கோடி 36 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மலர் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 6500 ஆகும்.

பதிவு செய்யப்படாத எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.