லிந்துலையில் மதுபானப் போத்தல்களுடன் சந்தேக நபர் கைது!

மத்திய மாகாணம் நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தலவாக்கலை விசேட அதிரடிப்படையினராலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

DSC09518தலவாக்கலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று சனிக்கிழமை இரவு குறித்த நபரின் வீடு சுற்றிளைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோதமாக மதுபான போத்தல் மற்றும் பியர் டின்களை வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு குறித்த நபர் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை மேற்படி அதிரடிப்படையினர் லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நுவரெலிய மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக லிந்துலைப் பொலிஸார் தெரிவித்னர்.