வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய என்.விலால் என்பவரே சம்பவத்தின்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியியற் கல்லூரிக்கு சொந்தமான வான் ஒன்று அப்பகுதியினூடே நடந்து சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர் மீது மோதியுள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, வாகனத்தையும் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் வாகன சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90 (5)