இதுவரையில் விஞ்ஞானிகள் உண்டு என்று உறுதியாக கூறாததும், இல்லை என்று முற்றாக மறுத்து ஒதுக்காததுமான ஒரே விடயம் வேற்றுக்கிரகவாசிகள் எனப்படுவதே.பூமியை தவிர்த்து விண்வெளியில் சிதறிக்கிடக்கும் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றார்கள் என விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றார்கள் ஆனால் அதனை வெளிப்படையாக இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் இருக்கு, ஆனால், இல்லை என்ற கருத்துகளைளே வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பூமியின் உள்ள மனிதர்கள் அனைவரையும் செல்வந்தர்களாக மாற்றும் அளவை விடவும் அதிக பணம் கொண்டு வேற்றுக்கிரக தேடல்கள் அன்றாடம் நடைபெற்றவாறே இருக்கின்றன.குறிப்பாக 2002 இற்கு முன்னர் வேற்றுக்கிரகவாசிகளை நண்பர்களாக மட்டுமே பார்த்துவந்த விஞ்ஞானிகள் அதன்பின்னர் எதிரிகளாகவும் அவர்களால் பூமி தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே அவர்களை தேட ஆரம்பித்தனர்.காரணம் அவர்களை நாம் முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டால், அபாயத்தில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை காரணமாகவே. 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஓர் பயிர் வட்டம் உருவானது.பிரம்மாண்டவடிவில் பூமியில் திடீரென தோன்றிய இந்த பயிர்வட்டம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்று விஞ்ஞானிகள் நிச்சயமாக நம்பினார்கள். இந்த பயிர்வட்டம் பூமியில் உருவாக்கப்பட்ட ஏனையவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. வேற்றுக்கிரகவாசி ஒன்று கோபமாக பார்ப்பது போல் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இது தகவல் ஒன்றினை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது எனினும் அது கூறும் செய்தியை விஞ்ஞானிகளால் இலகுவில் கண்டுபிடிக்க முடியவில்லை.தொடர்ந்த தீவிர ஆய்வுகளின் பின்னர் குறித்த பயிர்வட்டம் 8 Bit Binary Code ASC II என்ற கணினி மொழியில் அமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் அதன்படி அதில்;Beware the bearers of false gifts and their broken promises. Much pain, but still time. Believe there is good out there. We oppose deception. Conduit closing. என்ற செய்தியும் அதன் இறுதியில் நீண்ட மணி ஓசையின் வெளிப்பாட்டைக் காட்டும் வகையிலும் காணப்பட்டிருந்தது.அதாவது ‘எங்களின் எதிரிகள் ஏமாற்றுக்காரர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் பொய்யான பரிசுகளையும் கண்டு ஏமாற வேண்டாம் அதிக வலியிருந்தாலும் அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது அவர்களிடமிருந்தும் விலகியிருப்பது நன்மை தரும்’ என்று தமிழ் வடிவத்தில் பொருள் கூறமுடியும்.இந்த செய்தியே விஞ்ஞானிகளுக்கு பீதியை ஏற்படுத்துவதாய் அமைந்தது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. காரணம் இது முற்றிலும் அதிஉயர் அழுத்தம் கொண்ட லேசர் கதிர்களால் பயிர்களை அழுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இதன் உருவாக்கத்தில் எந்தபயிருக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதன் அடிப்படையில் வேற்றுக்கிரகவாசிகளில் இரு பிரிவினர் காணப்படலாம். அவர்களில் ஒருபிரிவினர் பூமியைக் காக்கவும் ஒருபிரிவினர் பூமியை தாக்கவும் திட்டமிடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.அதன்படி எதிரிகள் யார்? நண்பர்கள் யார் என்ற வகையிலேயே தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பூமியில் வேற்றுக்கிரகவாசிகளுக்கிடையில் மோதல்கள் நடந்தன என்ற அழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளும் கிடைத்துள்ளன.இந்தத் தகவல்கள் மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் இதுவரைக்காலமும் அவர்கள் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மாறுபட்டு, நெறிதவறி விடலாம் என்ற காரணத்திற்காகவே இவை மறைக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகின்றது.எனினும் மேலைத்தேய ஊடகங்களில் இந்த செய்திகள் அன்றாடம் வெளிவருவதால் மக்கள் மத்தியிலும் விஞ்ஞானிகள் மத்தியிலும் ஒரு வித பீதி கலந்த மனநிலை உள்ளதாக மேலைத்தேய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.குறித்த செய்தியில் கூறப்பட்ட காலம் எப்போது வரும்? பூமியை வேற்றுக்கிரகவாசிகள் தாக்குவார்களா? அவர்களுக்கு யார் எதிரி? என்று விடை கூற முடியாத நிலையிலேயே இன்று கோடிகளைக் கொட்டி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.