மலேசிய பிரதமர் டட்டுக் செரி நஜீப் ரஷாக் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனால் காலை 08.30 முதல் 09.15 வரை களனி பாலத்தில் இருந்து காலி வீதி ஊடாக பொரளை வரை பயணிக்கும் வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மலேஷியப் பிரதமரின் வருகையை முன்னிட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அமையவுள்ள மலேஷிய பிரதமரின் இந்த பயணத்தின் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிரதமர் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளாா்.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக மலேஷிய பிரதமரின் ஸ்ரீலங்காவிற்கான விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.