திமுகவுக்கு 21-ம் தேதி முகூர்த்தம் குறிச்சாச்சு என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
வரும் 21-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில் 2G அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மீது சில ஊடகங்கள் அவதூறு பரப்புவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஒருவர், திமுகவின் கைகூலிகளாக மாறிவிட்டதாகவும், அதனால் தான் இப்படி அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார்.
அதனை குறிப்பட்டு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, ‘உண்மை. 21 ம் தேதி வளைகாப்பு முகூர்த்தம் குறிச்சாச்சு. அதுக்கு இப்போதிருந்தே warmup exercise நடக்குது போல’ என்று கூறியுள்ளார்.
அதன் அர்த்தம், இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்கு பதிவாகும், அதன் மூலம் திமுகவின் எதிர்காலம் சரியும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், 2G ஊழல் வழக்கில் திமுகவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்பதால் அதை மறைக்கவே ஊடகங்களை வைத்து திமுக செயல்படுவதாக மறைமுகமாக கூறுகிறார் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.