காதல் ஆனந்தமான ஒன்றல்ல, அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி.
அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும். அப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் இணைந்தவர்கள், தங்கள் வாழ்வில் எவ்வித பிரச்சனை வந்தாலும், ஒருபோதும் விலகி செல்லமாட்டார்கள்.
அப்படி, ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரேசிலை சோந்த காதல் ஜோடியின் வாழ்வில் பேரிடி விழுந்தபோதும், அதனை கண்டுகொள்ளாமல் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்பதில் உறுதுணையாக இருக்கிறார்கள்.
பிரேசிலை சேர்ந்த அட்ரியான- லியண்டரோ ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் சிறுவயதிலேயே தாயை தொலைத்தவர்கள் என்பதால், இருவரும் அவர்களது தாயாரை தேடும் பணியினை அவ்வப்போது மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரேசிலின் பிரபல வானொலியில் ‘ஏஞ்சல் ஆப் மீட்டிங்ஸ்’ என்று தினசரி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்ரியானா, இறுதியில் தன் தாயை கண்டுபிடித்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரே தான் மனைவி லியண்டரோவின் தாயாகவும் இருந்துள்ளார். இதனால் இருவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணன், தங்கை உறவு முறையுள்ள இருவரும் தெரியாமல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இருவருக்கும் ஒருவரே தாயார் என்றாலும், இருவரும் வெவ்வேறு தந்தைக்கு பிறந்தவர் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.
இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது இருவரும் அண்ணன்- தங்கை என தெரியவந்த போதும் இருவரும் இணைந்து இருக்கப்போவதாக கூறி உள்ளனர்.