மருத்துவமனை படுக்கையில் கல்லூரி பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவி அதே நாளில் குழந்தை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் நைசியா தாமஸ் என்ற மாணவி கர்ப்பமாக இருந்தார்.
எப்போது வேண்டுமானாலும் நைசியாவுக்கு பிரசவம் நடக்கலாம் என்ற நிலையில் அவர் கல்லூரி செமஸ்டர் பரீட்சை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நைசியா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அன்று அவருக்கு கடைசி பரீட்சை இருக்கும் நிலையில் மருத்துவமனையின் படுக்கையில் இருந்தபடியே லேப்டாப் மூலம் வெற்றிகரமாக பரீட்சையை நைசியா எழுதி முடித்துள்ளார்.
இதில் அவருக்கு 3.5 ஜி.பி.ஏ புள்ளிகள் கிடைத்துள்ளன. நைசியா பரீட்சை எழுதிய அதே நாளில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்தின் போது குழந்தையின் தந்தை ஆண்டனி ஜான்சன் உடனிருந்தார். பிரசவத்தில் நைசியாவுக்கு அதிகளவு ரத்தம் வெளியேறி அவர் மயக்கமடைந்த நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
வெள்ளி கிழமையன்று நைசியா குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்திகளை நைசியா சமூகவலைதளங்களில் வெளியிட அது வைரலாகியுள்ளது.