கிளிநொச்சியில் இன்று முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேட்சை குழுவாக தாக்கல் செய்துள்ளது.
கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பினர் பேரணியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்
இந்நிலையில் மக்கள் ஒரு வினைத்திறன் மிக்க பிரதேச சபையை ஏற்படுத்த விரும்புவதாகவும் கடந்த காலங்கள் போன்று பிரதேச சபைகளின் செயற்பாடுகள் இருக்க கூடாது என மக்கள் விரும்புவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
எனவே நாம் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்கு வருகின்ற போது மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வினைதிறன் உள்ள சபையாக மாற்றி செயற்படுத்தி காட்வோம் எனத் தெரிவித்த அவர், கடந்தகாலத்தில் மாவட்டத்தில் எங்களுடைய செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இருந்ததன் காரணமாகவே மக்கள் மத்தியில் எமக்கான ஆதரவு தளமும் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.