நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம். சினிமா விழாக்கள், விமான நிலையம் என பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஆரத்யா படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா மேடையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பார்வையாளர்களாக கலந்துகொண்டு ஆராத்யாவின் நடனத்தை பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாவின் மகளின் அசத்தல் நடனம்…இதோ…..