இலங்கையை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற 16 வயது மாணவி இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.
Presbyterian Ladies – கல்லூரியில் இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பயின்ற இவர், 99.75 ATAR (Australian Tertiary Admission Rank) பெற்றுள்ளார்.
தனது வெற்றி குறித்து மாணவி ராகவி பகிர்ந்துகொண்டதாவது, இலங்கையில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற காரணங்களால் நாங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறினோம்.
இலங்கை பெண்கள் நல்ல கல்வியறிவினை பெற்றுக்கொள்ள வேண்டும். என்னை போன்று கல்வியறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்காக இலங்கையில் நிறைய பெண்கள் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு அவுஸ்திரேலியா தெரிவு செய்துள்ள 16 மாணவிகளில் ராகவியும் ஒருவர்.
தான் ஒரு மருத்துவராகி, சுகாதார சேவையில் பணியாற்றுவது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்றுவதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
எனது தந்தை Guyra Multi Purpose Service – இல் மருத்துவராக பணியாற்றுகிறார். நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதற்கு எனது தந்தையே ஒரு முன்னுதாரணம், மேலும் மருத்துவம் தொடர்பான சிறந்த யோசனைகளும் எனக்கு கிடைத்தது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் University of New South Wales – இல் மேற்கொண்டு எனது படிப்பினை தொடரவிருக்கிறேன் என கூறியுள்ளார்.