பிலிப்பைன்ஸ் நாட்டில் நாளுக்கு நாள் தடித்து பெரிதாகும் நாக்குடன் 2 வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருவது அவரது பெற்றோரை கலங்கடித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்ஸில் Little Zhyrille Cruz என்ற 2 வயது சிறுமியே அரியவகை புற்றுநோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
பிறக்கும்போதே வீங்கிய வாயுடன் பிறந்த சிறுமியை மருத்துவர்களிடம் காட்டிய பெற்றோர், சிறுமிக்கு lymphangioma என்ற அரியவகை நோய் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
ஏழ்மையில் தத்தளிக்கும் பெற்றோரால் அப்போது போதுமான மருத்துவ உதவிகளை செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது அது சிறுமியின் உயிருக்கே உலைவைக்கும் வகையில் மாறியுள்ளது.
சிறிது சிறிதாக சிறுமி Zhyrille-ன் நாக்கு தடித்து வாய்க்கு வெளியே துருத்திய வண்ணம் மூச்சு விடவும் பிரயாசைப்படும் நிலைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளது.
இதனிடையே சிறுமியின் தாயார் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுமியை கொண்டு காண்பித்துள்ளார். ஆனால் போதிய பணவசதி இல்லாமல் போகவே, பொதுமக்களிடம் இருந்து திரட்டிய நிதியால் தற்போது சிறுமி Zhyrille மூச்சுவிடும் அளவுக்கு குழாய் ஒன்றை அமைத்து சிகிச்சை செய்துள்ளனர்.
தடித்து பெரிதாகும் நாக்கின் அளவு படிப்படியாக குறைந்தால் மட்டுமே மருத்துவர்களால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி குறித்த நோய்க்கு பிரித்தானியாவில் மிக எளிதாக சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
ஆனால் அறுவைச்சிகிச்சை தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சிறுமி Zhyrille-ன் உயிருக்கு அது ஆபத்தாக முடியும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மாத வருவாயாக வெறும் 112 பவுண்ட்ஸ் மட்டுமே ஈட்டும் குறித்த குடும்பத்தால் சிறுமியின் மருத்துவ செலவு மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளை தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவி செய்தால் மட்டுமே சிறுமி உயிர் பிழைப்பார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.