அயர்லாந்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பாடசாலை தலைமை ஆசிரியர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.
அயர்லாந்தின் கேவன் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2016 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த பதற வைக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது துவங்கியுள்ளது.
கேவன் கவுண்டியில் உள்ள பாடசாலை தலைமை ஆசிரியரான Alan Hawe தமது 30-வயது மனைவி Clodagh Hawe மற்றும் சொந்த குழந்தைகளான Liam(14), Niall(11) மற்றும் Ryan(6) ஆகியோரை கத்தியால் கொடூர முறையில் கழுத்தை துண்டித்து கொலை செய்துள்ளார்.
இதில் தனது மனைவி Clodagh Hawe-ஐ தலையில் கடுமையாக தாக்கியுள்ளதும், கழுத்து எலும்புகள் உடைந்திருந்ததும், அதிகபடியான ரத்தம் வெளியேறியிருந்ததும் பொலிசாரின் விசாரணையின் போது தெரிய வந்தது.
மட்டுமின்றி குறித்த தாக்குதலில் ஆலன் பயன்படுத்திய கோடரி ஒன்றும் ரத்தக்கறை படிந்த கத்திகள் இரண்டும் பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும் தனது மனைவி கொல்லப்பட்டு கிடந்த அதே பகுதியில் ஆசிரியர் ஆலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு கிடந்துள்ளார்.
மட்டுமின்றி Clodagh-ன் நகைப்பெட்டியானது அழகாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை முதன் முறையாக Clodagh-ன் தாயார் பார்த்து அதிர்ச்சியுற்று உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மட்டுமின்றி மீட்கப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களில் ஆலன் கைரேகை பதிந்திருந்ததால் பொலிசாரின் விசாரணை, சம்பவத்தின் பின்னணி குறித்தே நடத்தப்பட்டது.
மேலும், ஆலன் கைப்பட எழுதப்பட்ட சில குறிப்புகளும் கடிதங்களும் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த கொடூர சம்பவம் குடும்ப பிரச்னை தொடர்பாக நடந்திருக்கலாம் எனவும், அதன் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.