“நதிகளை மீட்போம்” திட்டம் மிஸ்டு காலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய மோசடி இருக்கா..? எதற்கும் அஞ்சாமல் உண்மையை வெளிகொணர்ந்த அந்த நபர்..?

யார் இந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங்…?

ராஜேந்திர சிங் , மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர்.

2001-ஆம் ஆண்டில் ராமன் மகசேசே விருதையும் 2005-ஆம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றுள்ள இவர், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்

இந்தியாவின் தண்ணீர் மனிதர்” என்று புகழ்பெற்ற ராஜேந்தர சிங் கோவை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ஞாயிறன்று கொடுத்த பேட்டி இதோ,

“நதிகளை மீட்போம்” என்றபெயரில் இயக்கம் நடத்திய ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய பெயரை மிஸ் யூஸ் செய்து இருந்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது,

ஒரு அரசாங்கம் ஆற்றையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் போது, அதைத் தடுப்பதுதான் சாமியாரின் வேலை என்று மட்டுமே ஜக்கிவாசுதேவினை சந்தித்த போது நான்தெரிவித்தேன்.

இதுவரை நாடு முழுவதும்உள்ள 9 ஆறுகளை நான் மீட்டெடுத்து இருக்கின்றேன். ஆனால் இதுவரை ‘மிஸ்டு கால்’ மூலம் நதிகளை மீட்டுஎடுப்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது

அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.. இதுபோன்ற சாமியார்களுடன் அரசியல் வாதிகளும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள மனித உறவுகளை பயன்படுத்தி கொள்கின்றனர்

நதிகளை மீட்கும் ஜக்கியின் திட்டம் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பதற்கான திட்டம். இத்திட்டத்தைக் காட்டி பல மாநிலங்களில் ஆக்ரிமென்ட் போடப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ராம் ரஹீம்பாபா, ஆசாரம் பாபா உள்ளிட்ட 4 பிரபல சாமியார்கள் சிறைக்குப் போயிருக்கின்றனர், உங்களுக்கே தெரியும்

பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு மட்டும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார்.

இவரை ஊருக்கு அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும். ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த உள்ளேன்.

இதன் தொடக்க ஒருபகுதியாக வரும் 19 ஆம் தேதி கோவையில் ‘தர்மம்காப்போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

கருத்தரங்கத்தில் வெளிக்கொணர உள்ளவை..?

தனது பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள், ஈசா மையத்தில் சிலர் மர்மமான முறையில் செத்து போனது, சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு இருப்பதாக பொய்யான தகவலை கூறி மக்களை நம்ப வைத்தது என ஈசா மையம் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர உள்ளதாகவும் ராஜேந்திர சிங் தெரி வித்தார்.