பரீட்சைக்கு சென்ற மாணவிகள், ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் கவரங்ஹேன சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தமையால் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதப் பாடத்திற்கு தோற்றுவதற்காக சென்றபோதே குறித்த மாணவிகள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னரே குறித்த மாணவிகள் ஆசிரியரிடம் வீதியில் நின்றபடியே ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கெமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.