இலங்கை முழுவதும் இருளில் மூழ்கலாம்?

நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறைசார் தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமையே இதற்கான காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

5a380e608affd-IBCTAMILசில கோரிக்கைகளை முன்வைத்த மின்சாரசபை ஊழியர்கள் அவற்றிற்கான பதிலை இன்று நள்ளிரவுக்குள் வழங்குமாறும், மீறும்பட்சத்தில் தாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அறிவித்திருந்தனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோர்க்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டும் அவற்றிற்கான உரிய பதில்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படாத நிலையில் மின்சாரசபை பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்படி இன்றைய தினத்துக்குள் உரிய பதில் கிடைக்காவிடில் தற்போதைய உண்ணாவிரதம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள்வரை செல்லும் எனு எச்சரித்துள்ளனர். இதனால் நாடெங்கிலும் மின்சாரம் தடைப்படும் அபாயம் நிலவுவதாக சொல்லப்பட்டுள்ளது.