கிறிஸ்துமஸை கொண்டாட நினைத்தவருக்கு நடந்த பரிதாபம்…

சாப்பிட வீட்டுக்கு வருவேன் என கூறிய சில நிமிடத்திலேயே பயங்கர விபத்தால் 6 பேர் இறந்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Capturedcxdvபிரித்தானியாவில் 6 கார்கள் தொடர்ந்து மோதிக்கொண்டதில் 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதில் Castle carsல் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த Imtiaz Mohammed என்பவர் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் முன்னேறி வந்துள்ளார். குழந்தையின் பிறந்த நாளன்று உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது.

சில நிமிடங்களுக்கு முன் தான் மனைவிக்கு போன் செய்து சாப்பிட வீட்டிற்கு வருவேன் என கூறியுள்ளார். தன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். சில கனவுகள் இப்படியும் கலைந்து போகலாம் என்பதற்கு இவர் இறப்பு ஒரு உதாரணம்..