வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – என்கிறார் மைத்திரி

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்புபட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

150714163845_maithripala_sirisena_624x351_bbc_nocreditகொழும்பில் கலதாரி விடுதியில் நேற்று, நீதித்துறை அதிகாரிகளுக்கான கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘நீதியை வழங்குவதில் சுதந்திரமாக தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான பின்புலமும், தீர்ப்புகளில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாத நிலையும்  நாட்டில் உள்ளதாக நம்புகிறேன்.

எந்த நேரத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்குள் கொண்டு வரக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது நீதித்துறையை நம்ப வேண்டும் என்று  கூறி வந்திருக்கிறேன்.

சட்டமே  மேலானது என்றும், நம்பகமான நீதியை நடைமுறைப்படுத்த எமது அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் அனைத்துலக சமூகத்துக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்.

வெளிநாட்டு நீதிபதிகளின் ஆலோசனைகளின்றி, சட்டப் பணிகளை முன்னெடுக்க இங்கு போதுமான சட்ட அறிவுடையவர்கள் தேவையானளவு இருக்கிறார்கள். இதன் விளைவாக, பிரச்சினை தீர்க்கப்பட்டது.

ஐ.நா அமைப்புகள் அல்லது மனித உரிமைகள் பேரவை, அல்லது எந்தவொரு நாட்டினதும் அரசாங்கமும் எந்தவொரு நேரத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்தை முன்வைக்கவில்லை.

இது சுததந்திரமான இறைமையுடைய நாடு என்ற வகையில், சிறிலங்கா பெற்றுக் கொண்ட வெற்றியாக கருதுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.