பொன்ராம் படத்தில் நடித்து வரும் சமந்தா சிவகார்த்திகேயன், சூரியை பார்த்து கடுப்பானது தெரிய வந்துள்ளது. வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போதைக்கு எஸ்கே 12 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாவின் மனம் கவர்ந்த பங்கு சூரி தான் காமெடியனாக பொறுப்பேற்றுள்ளார்.
செட்டில் சிவகார்த்திகேயன், சூரி இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து சமந்தா கடுப்பானாராம். இதை சிவகார்த்திகேயன் தான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கும், சூரிக்கும் இடையே இவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கிறதே இதற்கிடையே நான் என்ன செய்வேன் என்று சமந்தா சிவகார்த்திகேயனிடம் கூறினாராம். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.