அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் இலங்கை!

பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil-wickremesinghe-prime-minister-of-sri-lanka-1ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் சர்வதேச நாடுகள் பலவும் ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இலங்கையும் தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் விளக்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்துக்கு அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் சென்ற போது, பிரதமர் இலங்கை சார்பான முடிவினை எடுத்துரைத்திருக்கிறார்.

இது தொடர்பில் பேசிய பிரதமர், பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இலங்கைத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடியாது என்றும் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து இலங்கைத் தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவும் தன்னுடைய இறுக்கமான முடிவினை வெளிப்படுத்தியுள்ளார்.