முல்லைத்தீவு – புதுக்குடிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.புதுக்குடிருப்பு 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெ.பிறின்சிகா என்ற வயது 24 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பெண் இன்று காலை அரலி விதையை உண்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.