அதில்,
அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, வெற்றிக்கு என்வாழ்த்துகள்… ஆனால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்களா?
நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இந்த எலெக்க்ஷனில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும்…
150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று??? சொன்னதெல்லாம்..? இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர வேண்டும் அதற்கு நேரம் ஒதுக்கினால் பரவாயில்லை..
பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர வேண்டும்.. பாகிஸ்தான்.. மதம்.. சாதி.. என சமூகத்தை பயமுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளை விஞ்சிய மிகப் பெரிய பிரச்சனைகள் இந்தியாவில் நிறைய உள்ளன என்பதை உணர்வீர்களா?
கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா?
விவசாயிகள்… ஏழைகள்.. கிராமவாசிகளின் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது ஓங்கி நிற்கிறதுஅது உங்களுக்கு கேட்கிறதா..?
சும்மாத்தான் கேட்கிறேன்… என்று சரமாரியாக மோடியை பிரகாஷ் ராஜ் வஞ்சபுகழ்ச்சியில் வாரியுள்ளார்.