ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோஹிணி.
இளையராஜா இசையிலும் வெளியானதால் அவருடைய முதல் படமே செம ஹிட். இப்படத்திற்கு பிறகு புதிய மன்னர்கள், நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பிறகு மலையாள படங்களிலும் நடித்தவந்த அவர் மார்க்கெட் குறைந்ததும் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
1999ம் ஆண்டு பரத் என்பவருடன் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பிறகு 2008ம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விண்ணப்பித்தார்.
இவர்களுக்கு ருத்ரகேஷ் என்ற மகன் உள்ளார்.