ஓகி புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர்!!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று தமிழகம் கேரளா மற்றும் லட்சதீவு ஆகிய இடங்களுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

know_the_pmதமிழக குமரி மாவட்டம்,லட்சதீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி ஏற்பட்ட ஓகி புயலால் பலர் இறந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் கடற் படையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு சார்பில் கேரளாவுக்கு 153 கோடி நிவாரண உதவியும் தமிழகத்துக்கு 531 கோடி நிவாரண உதவியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் மக்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.