ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான படம் ‘பாகுபலி 2’ . இப்படம் வெளியாகி, முதல் பத்து நாட்களுக்குள் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம்.
பாகுபலி 2 ரூ. இத்திரைப்படத்தில் நடித்த அனைவர்க்கும் இந்தப் படம் நல்ல பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. படத்தை இயக்கிய ராஜமௌலி இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் முதன்மையானவர் என பாராட்டப்பட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படத்தின் வெற்றி இன்றும் கொண்டாடபட்டு வருகிறது. இந்த படத்தை தற்போது ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதுவும் வரும் டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது. அங்கு படம் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பை பெற போகிறது என்பதை பார்க்க படக்குழு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.