ஆர்.கே.நகரில் வரும் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரங்கள் முடிவடையும் நிலையில் தற்போது ஆர்.கே.நகர் முழுவதும் அரசியல் கட்சியினரால் களை கட்ட தொடங்கியுள்ளது.
வேட்பாளர்கள் அனைவரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக சாரிப்பில் வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும், சுயேட்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிடுகின்றனர்.
தற்போது இவர்களுக்குள் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அ.தி.மு.க சார்பில் வரும் 20ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.
அந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்று அ.தி.மு.க தலைமை கழகம் தெரிவித்துள்ளது.