உத்தர பிரதேசம் அருகே 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.அந்த வகையில் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து சில காலமாக போக்குவரத்து துறையில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் உத்தரபிரதேசம் புனே மாவட்டத்தில் 10 வாகனங்கள் ஒன்றோடு ஓன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் அதிகாலை வேளைகளில் போக்குவரத்துக்களை கூடியளவு தவிர்த்துகொள்ளுமாறும் தொடர்ந்து சில காலங்களுக்கு பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.