ஜெயலலிதாவின் வாரிசு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பதில் சந்தேகமில்லையென்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதை அம்ருத்தா விரைவில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிப்பார் என்றும் சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதாதான் தனது தாய் என்று பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்ற பெண் உரிமை கொண்டாடி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அம்ருத்தாவை அறிவுறுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் மருத்துவரான சங்கர் சிகிச்சை கொடுத்ததால் தனக்கு எந்த வகையிலாவது உதவுவார் என்பதால் அவரை அம்ருத்தா அண்மையில் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை கொடுத்த 20 நாட்களும் நான் எந்தப் பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.
அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட திரவ ஒக்ஸிஜன் அவருக்குக் கொடுத்தேன். அதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும். உடல் சோர்வில்லாமல் இருக்கும்.
இவை அனைத்துக்குமான கட்டணத்தை அடுத்த முறை அழைக்கும் போது வழங்குவதாகத் தெரிவித்தனர்.ஆனால் அடுத்த முறை என்னை அழைக்கவே இல்லை. அந்தக் கட்டணத்தை அவரது வாரிசான அம்ருத்தாவிடம் பெற்றுக் கொள்ளலாம் என இருக்கிறேன்.
அம்ருத்தாதான் ஜெயலலிதாவின் வாரிசு. அம்ருத்தாவுக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துள்ளனர். அது ஜெயலலிதாவின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகும்.என்னைச் சந்திக்க வந்த அம்ருத்தாவின் நாடியைப் பிடித்து பார்த்த போது ஜெயலலிதாவின் நாடியைப் பிடித்துப் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
ஸ்டீராய்ட் பிரச்சினைகளை தவிர்த்து ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் அனைத்தும் அம்ருத்தாவுக்கும் இருந்தது.இருவரின் உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறை, கை அமைப்பு ஆகியன அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன.
28 ஆண்டுகளாக ஜெயலலிதாதான் தனது அம்மா என்று தெரியாமல் இருந்திருக்கிறார். தற்போது உண்மை தெரிந்தவுடன் அவர் வெளியே வந்துள்ளார்.
டி.என்.ஏ சோதனை முடிவுகளுக்குப் பிறகு, அம்ருத்தா நிச்சயமாக உரிமையுடன் போயஸ் கார்டனில் இருப்பார்.”இவ்வாறு கூறினார் டாக்டர் சங்கர்.
அதாவது அம்ருத்தா தனது பெற்றோரை நிரூபிக்க சோபன்பாபுவின் மகனுடைய டி.என்.ஏயும், ஜெயலலிதாவின் டி.என்.ஏயும் அம்ருத்தாவின் டி.என்.ஏயும் போதுமானவை என்று கூறுகிறார் அக்குபஞ்சர் மருத்துவரான சங்கர்.
ஜெயலலிதாவுக்கு நான் அளித்த சிகிச்சைகளைப் பார்த்து விட்டு அம்ருத்தா என்னை வந்து சந்தித்தார். அப்போது ‘ஜெயலலிதாதான் எனது அம்மா எனக்கு ஏதேனும் உதவ முடியுமா எனக் கேட்டார்.
அதற்குஎன்ன ஆதாரம் என்றேன். டி.என்.ஏ. சோதனைக்கு நான் தயாராக உள்ளேன். அதுபோல் சோபன் பாபுவின் மகனும் தயாராக உள்ளார் என்றார்.
டி.என்.ஏ. சோதனைக்கு ஜெயலலிதாவின் தொடை எலும்புகளும் பற்களும் தேவை என்பது தவறான தகவல்.
ஒரு முக்கிய பிரமுகர் இறக்கும் போது அவரது முடி இரத்தம் போன்ற ஏதாவது ஒரு டி.என்.ஏ.யை அப்பல்லோவில் எ’டுத்து வைத்திருப்பர். அது சட்டமும் கூட. அதை நீதிமன்றம் மூலம் கேட்டால் நிச்சயம் கிடைத்து விடும்.
ஜெயலலிதா மரணம் குறித்து அம்ருத்தாவுக்கும் சில சந்தேகங்கள் உள்ளதாகக் கூறினார். அதை சட்டரீதியாக அணுகிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டேன்.
நான் கூறிய அங்க லட்சணம், கை அமைப்பு, நோய்த் தன்மை என்பவற்றைக் கொண்டு அம்ருத்தா தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை 40 வீதம் உறுதிப்படுத்தலாம். மிகுதி 60 வீதத்தை டி.என்.ஏ. கொண்டு மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
ஜெயலலிதாவின் மரணம் என்பது மருந்துகளால் ஏற்பட்ட பின்விளைவுகள் தான். ஜெயலலிதா போயஸ் கார்டனில் இறந்த பிறகு தான் அப்பல்லோவுக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறுவதில் உண்மையில்லை.
இறந்த ஒருவருக்கு டிரக்கோடியம் சிகிச்சை செய்ய முடியாது. அவரது மரணம் முழுக்க முழுக்க அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே நடந்துள்ளது.
மருந்துகளின் பக்க விளைவு ஒரு புறம் இருந்தாலும் உணவுப் பழக்கம் சரியான கவனிப்பின்மையால் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என சிறுகச் சிறுக பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டார். இதற்கு அவருக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
ஒன்றரைக் கோடி மக்களின் தலைவியாக இருந்த ஒருவருக்கு நேரடியாக மருந்துகளைக் கொடுப்பதனால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் அவருக்கு முன்பு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யாரும் இதை கட்டுப்படுத்தாததும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்காததும் வேதனையளிக்கின்றது என்று டாக்டர் சங்கர் விபரித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமித்த விசாரணைக் குழுவில் அவரது இறப்புக்கு அவருக்கு நேரிடையாக வழங்கப்பட்ட மருந்துகளே காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் சங்கர்.
பெங்களூர் சிறையிலிருந்து வந்த போது கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது அவர் எங்கும் செல்லாமல் இருந்தார். எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் நான் போயஸ் கார்டனுக்குச் சென்று சிகிச்சை அளித்தேன்.
அப்போது அவரது கல்லீரலின் ஆற்றல் சற்று ஏற்றத் தாழ்வுடன் இருந்தது. அதைச் சரிசெய்து விட்டு அவரது மூட்டு வலி, காலையில் எழுந்தவுடன் ஏற்படும் மயக்க நிலை, இரவில் தூக்கமின்மை, இரத்த அழுத்தம், நீரிழிவு என்பவற்றை நான் சரிசெய்துள்ளேன்.
அவருக்கு வலி நிவாரணி மருந்துகளை நீண்டகாலமாக நேரிடையாக கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்விளைவுகள் அதிகமாக இருந்ததை நாடி பிடித்தவுடன் தெரிந்து கொண்டேன்.
இதை ஜெயலலிதாவிடம் தெரிவித்த போது அவர் வலி நிவாரணி மருந்துகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வதாக கூறினார்.
அவருக்கு 2 மாதங்களாக நான் சிகிச்சை அளித்து வந்தேன். நீரிழிவு நோய்க்கு நான் சிகிச்சை அளித்த போது அவரது கால் விரல் முனையில் ஊசி செலுத்தினேன். அப்போது ஜெயலலிதாவின் கால்களில் 10 விரல்களும் இருந்தன.
நீரிழிவு நோயால் அவரது கால் விரல்கள் வெட்டப்பட்டு விட்டதாக தகவல் பரவியது இது வெறும் வதந்தி தான்.
நேரிடையான மருந்துகளை அவர் அதிகம் உட்கொண்டதால் தான் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று, நுரையீரல் தொற்று ஆகியன ஏற்பட்டன.
நேரிடையான மருந்துகள் அதிகம் எடுத்தால் முகம் நிலா போன்று வீங்கி விடும். கன்னத்துக்கு கீழ் இருக்கும் சதைகள் தொங்கி விடும். இந்தப் பிரச்சினையையும் கொஞ்சம் கொஞ்சமாக நான் சரி செய்தேன். இதனைப் பார்த்து அவர் ஆச்சரியமடைந்தார்.
நேரிடை வகை மருந்துகள் தைரொய்ட் சுரப்பிகளைப் பாதித்து கல்சியம் மெட்டபாலிசத்தை குறைப்பதால் எலும்புகள் வலுவிழக்கும். இதன் பாதிப்பால் மெட்ரோ ரயில் திட்ட தொடக்கத்தின் போது அவரால் நிற்க முடியாமல் கண்கலங்கினார். இதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம் என்றார் டாக்டர் சங்கர்.