கண்கள் துடிப்பதற்கு காரணம்! இது ஒரு வகை நோய்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 (30)வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாம் வீட்டிலேயே சாஸ்திரம் பார்த்துவிடுவோம். ஆனால் கண் துடிப்பது உண்மையில் கெட்டது என்றும் அது கெட்டதுக்கான அறிகுறி என்றும் தான் சொல்ல வேண்டும்.

கண்கள் துடிப்பதற்கு காரணம் நம் உடல்நிலையே. நம் உடலை சுற்றியும் உடல் முழுவதிலும் மின்னோட்டமும் நுண்னிய மின்னணுக்களும் உள்ளன. இந்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்த கண்கள் துடிப்பதற்கு காரணமாக அமைகின்றன.

இது அனைவருக்கும் சில சமயங்களில் ஏற்படும். இதற்காக பயப்பட வேண்டியதில்லை. இந்த கண் துடிப்பு சிலருக்கு சில விநாடிகளும், ஒரு சிலருக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும் நடக்கும். நம் உடலில் உள்ள மின்னணுக்களுக்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் இதற்கு காரணம்.

எனினும் இதற்கு பல கரணங்கள் உள்ளன.அதாவது தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தமான பிரச்சனை வரை பல காரணங்கள் உள்ளன.

கண் துடிப்பது சில நிமிடங்கள் வரை நீடித்து பின் தானாகவே நின்றுவிடும். இது தொடர்பில் பயப்பட தேவையில்லை.ஆனால் இது பல நாட்களாக அல்லது பல மாதங்களாக நீடித்தால் வைத்தியரை அணுகுதல் வேண்டும்.

கண்கள் துடிப்பதனை மயோகீமியா (Mayokimiya) என மருத்துவ துறையில் அழைப்பர்.கண்களின் மெல்லிய நரம்புகள், தசைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாலேயே இந்நோய் நிலைமை ஏற்படும்.

உடல் சோர்வு, குடிப்பழக்கம், கண்கள் வறண்டு போதல், மன அழுத்தம், உடலில் போசணை பற்றாக்குறை, அதிகமாக கோப்பி குடித்தல், ஒவ்வாமை, அதிகமாக கணினித்திரை பார்ப்பது, ஓய்வின்றி படிப்பது போன்ற காரணங்களால் கண்கள் துடிக்கும்.

கண்கள் துடிப்பது மட்டுமன்றி கண்கள் சிவந்திருத்தல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற நிலைமை ஏற்படின் அது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய நிலைமை ஆகும்.

இவ்வாறான பிரச்சனைக்கு நன்றாக தூங்கி கண்களுக்கு ஓய்வளிப்பதன் மூலமாக தீர்க்கலாம்.அல்லது வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுக்க கண் துடிப்பது நீங்கும்.இந்நிலை நீடிக்குமாயின் வைத்தியரை நாடுவது சிறந்தது.