தொகுப்பாளர்களில் மிகவும் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் ஒரு சில நாட்களாக தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.
இதை உண்மை என்று நிரூபிக்கும் பொருட்டு பவர் பாண்டி படத்தில் ‘செல்வி’ திவ்யதர்ஷினி என்று தான் இவர் பெயர் திரையிடப்பட்டது.
தற்போது இவர் தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சில செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். இதுக்குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.