ரஷ்யாவில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று(18) திங்கள்கிழமை ஆரம்பமானது.
மேற்படி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புத்தின், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நான்காவது முறையாக மீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் விளாடிமிர் புத்தின் ஆட்சியை நிறைவு செய்தால், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பை மீக நீண்ட காலம் வகித்தவர் என்ற பெருமையை விளாடிமிர் புத்தின் பெறுவார்.
இவ் விடயம் தொடர்பில், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்தை நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில் விளாடிமிர் புத்தின் தனது ஆளும் கட்சியில் அன்றி சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாகவும் அவருக்கு எதிராக 23பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்.