பிரபாகரனின் வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் மீட்பு!

Capturegfhv gfகிளிநொச்சி-இராமநாதபுரம் பகுதியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பழைய முகாம் ஒன்றிலிருந்து இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கக் கூடிய இறுவட்டுக்களே இராமநாதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பின்னர் வீடுகள் அமைப்பதுக்காக இடத்தின் உரிமையாளர்கள் அத்திவாரம் வெட்டும் போதே பாதுகாப்பான கொள்கலன் ஒன்றிலிருந்து 91 இறுவட்டுக்களும், 61 பாதுகாப்பு உறைகளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இறுவட்டுக்களில் வயதானவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.