வாழ்கை என்பது ஒரு முறை தான். அந்த ஒரு வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக நோய்நொடி இல்லாமல் வாழ்த்திட வேண்டும். சிலருக்கு வயதாகிவிட்டால் கண் பார்வை மங்க தொடங்கிவிடும். கண் பார்வையை அதிகரிக்க இந்த குறிப்புகளை பயன் படுத்தலாம். ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
மேலும், பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.
அதைத்தொடர்ந்து, கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். இந்த மூன்று குறிப்புகளில் ஏதாவது ஒரு குறிப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.