ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் விவேக் ஜெயராமன் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதாவின் மரியாதையை குறைக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் ஏற்க இயலாது என்றும், மக்களிடையே பெருமைமிகு அடையாளத்தோடு வாழ்ந்த ஜெயலலிதாவை பற்றி வேறுவிதமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை விமர்சித்தால் நடவடிக்கை என்று இதற்கு முன்னர் தினகரன் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இது போன்று விஜயகாந்தும் ஜெயலலிதா குறித்து பேசிய விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆக.10-ந்தேதி தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் ரோட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் குப்புசாமி தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல் கபிஸ்தலத்தில் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தலைமைக்கழக பேச்சாளர் ஜெயக்குமார் ஆகிய 2 பேர் மீதும் இதே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.