5079ல் உலகம் அழிந்துவிடும்! 2018ல் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்!

2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும், சீனா வல்லரசு நாடாக மாறும் மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும் என பிரான்ஸ் விஞ்ஞானி கணித்துள்ளார்.

5a38b788069a2-IBCTAMIL14 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த தத்துவஞானி நாஸ்டிரடாமஸ் 5079 ஆம் ஆண்டுவரை உலகில் என்னவெல்லாம் நடக்கும் என கணித்து கூறியுள்ளார்.

இவரின் கணிப்புப்படியே முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் பூகம்பங்கள் என்பன இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் கணிப்புக்கள் அனைத்தும் 1555 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன.

மேலும் இவருக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு தத்துவஞானி இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் இரும்புப் பறவைகள் மூலம் கட்டடங்கள் இடிக்கப்படும், ரஷியாவில் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கும் என்று இவர் கணித்தது போலவே இரட்டை கோபுர தகர்ப்பு மற்றும் குர்ஸ்க் தண்ணீரில் மூழ்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டில் சீனாதான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும், உலக நாடுகளுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். மேலும் கத்தோலிக்க திருச்சபை தலைவர் மரணம் சம்பவிக்கும் என்றும், அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும் என்றும், இத்தாலி நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

இதைவிட 2023 ஆம் ஆண்டில் இருந்து 2045 ஆம் ஆண்டுவரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவுஉருகும் என்றும் இதனால் கடல் மட்டம் அதிகரித்து பல பகுதிகள் அளியும் என்றும் 2046 ஆம் ஆண்டில் இருந்து 2070 ஆம் ஆண்டிற்குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும் என்றும் மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கிவிடுவார்கள் என்றும் இறுதியாக 5079 ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்றும் அவரது கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.