அறிவியல் இயக்கத்தின் மூத்த நிர்வாகி ஆர்.விவேகானந்தன் சனிபெயர்ச்சி பற்றி கூறியது,
அவர் பேசும்போது,
வானியலில் அருகருகே தெரியும் சற்றே பிரகாசமான நட்சத்திரங்களை ஒன்றிணைத்து 88 பெரும்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
இவற்றை நட்சத்திர மண்டலங்கள் என்று கூறுகிறோம்.
மேஷம், ரிசபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருட்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என நம் நாட்டில் அறியப்படும் 12 ராசிகளும் இந்த நட்சத்திர மண்டலத்தில் அடங்கும்..
இதனை பற்றி விவரமாக அறிய நாம் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
22.80 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர சுமார் 23 மாதங்கள் எடுத்து கொள்கிறதாம்
எனவே சுமார் 2 மாத காலம் ஒவ்வொரு ராசியின் அருகே காணப்படும் வியாழன் (குரு பகவான்) சுமார் 77.83 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதாம்..
இது சூரியனைச் சுற்றிவர 12 வருடங்கள் (4332 நாட்கள்) ஆகும். எனவே இந்த கிரகம் ஒரு ராசியின் அருகே சுமார் ஒரு ஆண்டு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
சனி கிரகம் தனது சுற்றுப்பாதையில் ஒரு ராசியின் அருகே சுமார் 2.5 ஆண்டுகள் காணப்படும். இவ்வாறு தான் சுமார் 2.5 ஆண்டுகள் மேஷ ராசியின் அருகே இருந்த சனி கிரகம் இப்போது ரிஷப ராசியின் அருகே செல்ல உள்ளது.
இதனைத்தான் ‘‘சனி பெயர்ச்சி’’ என்று நம்பிக்கையாளர்கள் கொண்டாடுகிறார்கள்..மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்துள்ளது என்பது மிக முக்கியமானது
ரிஷப ராசிக்காரருக்கு சனி உச்சத்தில் உள்ளது. மிதுன ராசிக்காரருக்கு சனி பார்வை துவங்கிவிட்டது ,ஏழரை நாட்டுச்சனியன் சூட்சமம் இதுதான்..