தனது மகளுக்கு கர்ப்பம் தங்காமல் போனதால், வாடகை தாய் முறையில் 60 வயது பாட்டி குழந்தை பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா என்பவரின் மகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மகளுக்காக தனது வயிற்றில் கருவை சுமக்க கிறிஸ்டினா முடிவு செய்துள்ளார்.
பொதுவாக, வாடகை தாய் முறைக்கு 35 வயதிற்குள் இருக்கும் பெண்கள் தான் தேந்தெடுக்கப்படுகிறார்கள். 60 வயதாகும் இவரால் எப்படி வலிகளை தாங்கி கொள்ள முடியும் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
வைத்தியர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு கிறிஸ்டினாவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்ததையடுத்து, கருத்தரிப்பிற்கு கிறிஸ்டினாவின் மகள் சாராவின் கருமுட்டையும் அவளது கணவனின் விந்தணுவும் பயன்படுத்தப்பட்டது.
கருவை சுமந்த கிறிஸ்டினா அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். 60 வயதாகிவிட்டதால் சிசேரியன் முறையில்தான் அவருக்கு பிரசவம் நடந்தது. இவரது பிரசவ அறையில் இருந்த ஒவ்வொருவர் கண்ணிலும் கண்ணீர் கொட்டியது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் என்ன தான் வாடகை தாயாக இருந்து ஒரு குழந்தையை பெற்றேடுத்தாலும் கூட அந்த குழந்தையை பெற்று அந்த குழந்தைக்கு சொந்தமானவர்களிடம் கொடுக்கும் போது ஒரு மன வருத்தம் இருக்கும்.
இந்த வருத்தம் அக்கா, தங்கைகள் வாடகை தாயாக இருந்தால் கூட இருக்கும். ஆனால் கிறிஸ்டின் தனது பேரக்குழந்தையை பெற்றெடுத்ததிலும், அவனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைப்பதிலும் எனக்கு எந்த ஒரு மனவருத்தமும் இல்லை எனவும், மேலும் இது போன்று என் பெண்ணுக்காக நானே கருவை சுமப்பது எனக்கு மகிழ்ச்சியை தான் தருகிறது. என்றும் கண் கலங்க கூறினார்.