ஒருவரின் மூளையில் ஏற்படும் காயங்களானது அவரைக் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவராக எதிர்காலத்தில் மாற்றுவதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.
மூளையில் தார்மீக ரீதியில் தீர்மானமெடுக்கும் பகுதியில் ஏற்படும் சேதங்களானது காயத்துக்குள்ளானவர் சட்டத்தை மீறும் செயற்பாடுகளில் ஈடுபடும் அபாயத்தை அதிகரிப்பதாக அமெரிக்க மஸாசுஸெட்ஸிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.
மூளையில் தார்மீக சிந்தனைகளுக்கு பொறுப்பாகவுள்ள தனியொரு வலைப்பின்னல் கட்டமைப்பில் ஏற்படும் காயங்கள் பாதிக்கப்பட்டநபர் சட்டத்தை மீறும் செயற்பாடுகளில்தொடர்ந்து நிரந்தரமாக ஈடுபட வழிவகை செய்கிறது என மேற்படி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது இந்த ஆய்வானது எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது நடத்தையை மாற்றிக் கொள்வதற்கு சிகிச்சையளிக்க உதவும் என நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.