வாய்ப்பு வராததற்கு இவர் தான் காரணமா..? அதிர்ச்சியில் நண்பர்கள்..!

அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வந்தார், இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் டிடி திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளினியாக தொடர்ந்தார்

இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் வேண்டப்பட்ட கோரிக்கை,

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.