கடமையில் பொலிஸார்! பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில், பெண்கள், சிறுவர் மீதான வன்முறைகளை குறைக்கவும் மற்றும் சிறுவர், பெண்களை பாதுகாக்கும் பொருட்டும் பாடசாலைகள் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் கடமையிலுள்ள பொலிஸார்!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகள் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களிலேயே, பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்முறைகளை குறைக்கவும், சிறுவர் பெண்களை பாதுகாக்கும் பொருட்டும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நேற்று முன்தினம்(18.12.2017) செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒன்று கூடலின் போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு சிலர், பாடசாலை மாணவர்களுக்கு தொந்தரவு வழங்குவதாகவும், அதிவேகமாக பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களின் முன்பு மோட்டார் சைக்கிளை செலுத்துவதாகவும், கிராமசேவை உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் கூறப்பட்டதற்கமைய அவ்விடங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் கூறினர்.

இந்த ஒன்றுகூடலில், வலயக்கல்விப் பணிப்பாளர், உதவிப்பிரதேச செயலாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸார் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.