தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரேயா, கதாநாயகியாக இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நீண்ட இடைவேளை பிறகு ஸ்ரேயாவுடன் இணைந்து மோகன்பாபுவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், ஸ்ரேயாவின் நடிப்பு குறித்து படநாயகன் மஞ்சு விஷ்ணு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த காயத்ரி படத்தில் ஸ்ரேயா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இதுவரை கொடுக்காத வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 9-ந்தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.