மலையகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையின் காரணமாக நுவரெலியா மாவட்டம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்திலும் அதே நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிமுதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் நீர்தேக்க பகுதிகளின் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.